
தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு மூன்று மாத காலத்திற்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசின் eShram இணையதளம் மூலமாக ரேஷன் கார்டு இல்லாத வெளி மாநில தொழிலாளர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
அதில் குடும்ப அட்டை காணாமல் படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தனித் தாசில்தார் வட்ட வழங்கல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்பத்தில் பூர்வீக மாநிலத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்ட பிறகு தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.அதனைப் போலவே தற்காலிகமாக அல்லது குறைந்த காலம் வசிக்கக்கூடிய அல்லது குடும்பத்தை பிரிந்து தனியாக வாழும் நபர்களின் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைகள் வழங்க பரிந்துரை செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.