தமிழகத்தின் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியும் பொது தேர்வு நடைபெற உள்ளது. என் நிலையில் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய முத்தரவிட்டது. மேலும் மின்தடை ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னேற்பாடுகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
