இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆடை சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாக உள்ளது. ஆனால் சில நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மெருன் கலர் சேலை, மெருன் கலர் சுடிதார் அணிந்து வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதே சமயம் பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் யாரும் லெக்கின்ஸ் அணியக்கூடாது என்றும் கட்டாயமாக துப்பட்டா அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண் ஊழியர்களுக்கும் வெள்ளை நீளக்கால் சட்டை தான் அணிய வேண்டும் என்று ஆடை கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.