தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்கள் மற்றும் கனமழையால் நேற்று என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் இன்று ரெட் அலர்ட் விடுத்தும் விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியில் இருந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
