தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் திருவிழாக்களை மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளூர் விடுமுறைகளை அறிவித்து வருகிறார்கள். அவ்வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் இந்த திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 5ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தற்போது 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருப்பதால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் மற்ற மாணவர்களுக்கான முக்கிய தேர்வுகளும் மற்றும் பொதுத்தேர்வுகளும் எவ்வித இடையூறும் இல்லாமல் பழக்கம் போல நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது