தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் திறனை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு மொழி ஆய்வகத் திட்டம் கடந்த மார்ச் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் மூலமாக மாணவர்கள் தங்களின் கணினிகள் மூலம் டிஜிட்டல் உள்ளடக்கத்தை பயன்படுத்தி சுயவேக கற்றலை அதிகரிக்க முடியும். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இந்த மொழி ஆய்வக திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக அந்தந்த பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில் ஹெட்செட்டுகளும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.