தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக பேசினார். அதன்படி திருச்சி முக்கொம்பில் சிறிது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கவனம் ஏற்ப தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நிலையில் அப்போது பேசிய முதல்வர், திருச்சியில் காவலர்களை குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக பேசினார்.

அப்போது எதிர்க்கட்சியினர் காவலர்கள் மீது சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த நிலையில் உடனே பதில் அளித்த முதல்வர் அது உண்மை இல்லை என்றும் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறினார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.