தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் தேர்வு நடத்தி தயார்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்து முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தனியார் பள்ளிகள் தங்களின் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தினசரி தேர்வுகள் நடத்தி மாணவர்களை பொது தேர்வுக்கு தயார்படுத்தும் நிலையில் தனியார் பள்ளி மாணவர்கள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.

அதனால் அரசு பள்ளி மாணவர்களையும் அதிக மதிப்பெண் பெற வைக்கும் விதமாக மாதம்தோறும் தேர்வு நடத்தி அவர்களை தயார்படுத்த வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் நடத்த வேண்டிய தேர்வு மற்றும் பாடத்திட்ட விவரங்கள் அனைத்தையும் பள்ளிகளுக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். இதனால் அடுத்த வருடம் பொது தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.