ஆடிகிருத்திகை அன்று பல்வேறு ஊர்களிலும் இருந்து பக்தர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரை சென்று முருகனை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஆடிக்கிருத்திகை வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வர இருக்கிறது. இதை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளிலும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செயல்பட உள்ளது. இந்த நிலையில் கிருத்திகை முன்னிட்டு கோயில்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் வீட்டிலேயே பூஜை செய்து சுவாமிக்கு பிரசாதம் படைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் whatsapp செயலில் இருந்து  04442890021 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பழனி முருகன் கோவில் அர்ச்சகரியிடம் பெயர் மற்றும் நட்சத்திரம் கூறினால் உங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்யப்படும் என்று போலியான தகவல் ஒன்று பரவி வருகிறது. இதை உண்மை என்று நம்பி பலரும் ஏமாறுகிறார்கள். எனவே அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இதுபோன்று எந்தவித அர்ச்சனையும் வாட்ஸ் அப் மூலமாக வழங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் யாரும் இதுபோன்ற தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.