சென்னை கண்ணகி நகரில் போதையிலிருந்து விடுபடுபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தற்காலிக அரசு வேலை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். போதை பழக்கத்தால் ஏற்படும் மனநல பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக சென்னை கண்ணகி நகரில் நட்புடன் உங்களோடு போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், இதுவரை என் வாழ்நாளில் எந்தவித போதை பழக்கத்திற்கும் உள்ளாகவில்லை.

இங்கு போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை வீட்டில் உள்ள பெண்கள் குறிப்பாக மகள்கள் தங்கள் தந்தையிடம் மது அருந்த வேண்டாம் என்று அடம் பிடிக்க வேண்டும். போதைக்கு அடிமையாகி இந்த மையத்தின் மூலமாக அதிலிருந்து விடுபட்டு அவர்களுக்கு வேறு விதமான உடல்நல பாதிப்பே இல்லாத பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் தேசிய நலவாழ்வு குழு சார்பாக தற்காலிக அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அரசியல் தற்காலிக பணியிடங்களை நிரப்பும்போது போதையிலிருந்து விடுபட்ட கண்ணகி நகர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.