நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று (மே 17) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகளிலேயே பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது. கட்டாயம் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமார் ஆவார்” என தெரிவித்துள்ளார்.