இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் மிகவும் பிரபலமானவை என்றால் அவை ஐஐடிகள்தான். இங்கு படித்து வெளியேறக் கூடிய மாணவர்களுக்கு சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் வாங்கும் வேலைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான மாணவர்கள் பணியில் உள்ளனர்.
அதே சமயம் இங்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் காரணமாக தொடர் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக வகுப்பறை நேரத்தை 434 மணி நேரத்தில் இருந்து 400 ஆக சென்னை ஐஐடி குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
