மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவளித்த புரட்சி பாரதம் கட்சி, புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக சீட் தராததால் அதிருப்தியில் இருந்த அக்கட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் சீட் தருவதாக அதிமுக உறுதியளித்த பின் கூட்டணியில் தொடருவதாக அறிவித்தது. இந்நிலையில் புதுவையில் புரட்சி பாரதம் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.