தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த தொல்லியல் துறையும் அவரே கவனிப்பார். தங்கம் தென்னரசு விடமிருந்த தமிழ் வளர்ச்சித் துறை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தங்கம் தென்னரசு – நிதி, மனிதவள மேம்பாடு

டி.ஆர்.பி.ராஜா – தொழில்துறை

சாமிநாதன் – தமிழ் வளர்ச்சி

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் – தகவல் தொழில்நுட்பம்

மனோ தங்கராஜ் – பால்வளத்துறை

இந்நிலையில் அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றி வழங்கப்பட்ட அறிவிப்புகள் வெளியான நிலையில் விரைவில் தமிழக உயர் அதிகாரிகளின் பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியத்துறையின் செயலாளர்களும் மாற்றப்பட கூடும் என்றும் இந்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.