தமிழகத்தில் மாலை 7 மணி வரை தேனி, தென்காசி, கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மேலும் திருப்பூர், நீலகிரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.