தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ள பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இது திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

கடந்த ஓராண்டில் மட்டும் திமுக அரசு பெருமளவு கடன் வாங்கியுள்ளதாகவும், 2027-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் மொத்த கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பட்ஜெட்டில் வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், திமுக அரசு வாங்கிய இவ்வளவு பெரிய கடன் தொகை எதற்காக மற்றும் எப்படி செலவிடப்பட்டது என்பது குறித்து அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மத்திய அரசின் வர்த்தக ஒப்பந்தங்களால் தான் தமிழகத்தின் வருவாய் அதிகரிக்கும் என்பதை திமுக அரசு இந்த பட்ஜெட்டில் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.