தன் கண் முன்னே தன் மனைவி இன்னொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவனுக்கு, அதைவிட ஒரு பெரிய கொடுமை அந்த இடத்திலேயே அரங்கேறியுள்ளது. தனது மனைவியின் தவறான உறவை கையும் களவுமாகப் பிடித்த அந்த கணவன், நியாயம் கேட்டு அந்த நபரிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால், செய்த தவற்றிற்கு கொஞ்சம் கூட வெட்கப்படாமலும், மன்னிப்பு கேட்காமலும் ஆத்திரமடைந்த அந்த கள்ளக்காதலன், கணவனையே நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்து விடுவதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்து வன்முறையில் இறங்கியுள்ளான்.
இந்த ஒட்டுமொத்த மோதலையும், கணவன் மிரட்டப்படுவதையும் அருகில் நின்றபடி பார்த்த அந்த மனைவி, கணவனுக்கு ஆதரவாகப் பேசாமல், மாறாகத் தன் கள்ளக்காதலனுக்கு சப்போர்ட் செய்து கணவனை ஆத்திரத்தோடு முறைத்துப் பார்த்தபடி நின்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே இரண்டு வயதில் ஒரு பச்சிளம் ஆண் குழந்தை இருக்கும் நிலையில், அந்தப் பிள்ளை குறித்தோ அல்லது தன் குடும்பத்தின் மானம் மரியாதைக் குறித்தோ அந்தப் பெண் கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
A husband caught his wife having an affair.
Instead of apologizing, the boyfriend threatened the husband with viôlence.
The wife stood by angrily throughout the confrontation.
Despite having a two-year-old son, she appeared unconcerned about the situation. pic.twitter.com/8wy23ay779
— Sharroh (@Sharroh45) July 5, 2026
தன் குழந்தையின் எதிர்காலத்தை விடவும், தன் கணவனின் உயிரை விடவும் கள்ளக்காதலனே முக்கியம் என்ற நோக்கில் அந்த மனைவி காட்டிய திமிரான நடத்தை ஒட்டுமொத்தப் பகுதியையும் பரபரப்பாக்கியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், “இப்படியும் ஒரு கல்நெஞ்சக்கார தாய் இருப்பாறா?” என்று பலரையும் சாட வைத்து, காட்டுத்தீயாய் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
