வீட்டின் அடியில ஹமாஸ் பாணி சுரங்கமா?” என்று ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் வாயடைத்துப் போக வைத்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தான் இப்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கேரளாவில் ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட வீட்டை குறிவைத்து போலீஸார் அதிரடி சோதனையில் (Raid) ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வீட்டிற்குள் நுழைந்த போலீஸாருக்கு அங்கே காத்திருந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீட்டின் அடியில், சர்வதேச அளவில் தீவிரவாதிகள் பயன்படுத்தும் ‘ஹமாஸ் பாணி’ சுரங்கம் (Hamas-style tunnel) போன்ற ஒரு அதிநவீன ரகசிய சுரங்கப்பாதையை அந்த கும்பல் அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Police raided a house in Kerala with "Masha Allah" written above the front door. Inside they found a Hamas style tunnel and a huge quantity of drugs. pic.twitter.com/xDQTTR1SIc
— Rakesh Krishnan Simha (@ByRakeshSimha) July 5, 2026
யாரும் எளிதில் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் அடியில் மிக ரகசியமாக அமைக்கப்பட்டிருந்த அந்தப் பகுதிக்குள் நுழைந்து சோதித்த போது, அங்கே மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயங்கர போதைப்பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தலுக்காகவும், அதை ரகசியமாகப் பதுக்கி வைப்பதற்காகவும் இவ்வளவு பெரிய சுரங்கத்தை ஒரு கும்பல் குடியிருப்புப் பகுதிக்குள்ளேயே அமைத்திருந்தது ஒட்டுமொத்த கேரளா மாநிலத்தையும் உலுக்கியெடுத்துள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, “என்னடா நடக்குது அங்கே? இவனுங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது” என்று மக்கள் கமெண்ட் பாக்ஸைக் கிளறி, இந்த பகீர் செய்தியைத் தீயாய் ஷேர் செய்து வருகின்றனர்.
