“இந்திய தொப்பியை போய் இப்படி மதிக்காமலா இருக்கலாமா?” என்று இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி, தனது முதல் இந்திய தொப்பியைப் (India Cap) பெற்ற இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி செய்த காரியம் இப்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆட்டம் முடிந்த பிறகு, தனக்குக் கிடைத்த அந்தப் பெருமைக்குரிய அறிமுக இந்திய தொப்பியைத் தனது ரசிகர் ஒருவருக்கு வைபவ் பரிசாக வழங்கியுள்ளார். ஆனால், அவரது இந்தச் செயல் இந்திய அணியின் மேனேஜ்மென்ட் மற்றும் முக்கிய ஸ்டாஃப்ஸை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது; இது இந்திய தொப்பிக்கும், கிரிக்கெட் விளையாட்டுக்கும் செய்யும் மிகப்பெரிய அவமதிப்பு என்று கூறி வைபவ் சூர்யவன்ஷியை சஸ்பெண்ட் செய்யக் கூட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
🚨 VAIBHAV SOORYAVANSHI MAY FACE SUSPENSION FOR DISRESPECTING 🤯
After making his debut against England and receiving his maiden India cap.
Vaibhav Sooryavanshi has gifted his debut cap to one of his Fan, But Reportedly some staff member and management is not happy with this… pic.twitter.com/U7RdZMd78q
— Sports Club (@SportsxClub) July 5, 2026
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதமே வெடித்துள்ளது. ஒரு தரப்பினர், “நாடே பெருமையாகப் பார்க்கும் இந்திய தொப்பியை இப்படி சாதாரணமாக ரசிகருக்கு தூக்கிக் கொடுக்கலாமா? இதுக்கு சஸ்பென்ஷன் தண்டனை சரிதான்” என்று மேனேஜ்மென்ட்டுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இன்னொரு தரப்பினரோ, “அவர் ரசிகர் மீதுள்ள பாசத்தில் தான் கொடுத்தார், இதற்குப் போய் சஸ்பெண்ட் செய்வதா?” என்று வைபவ் பக்கமும் சப்போர்ட் செய்து கமெண்ட் பாக்ஸை ரணகளமாக்கி, இந்தச் செய்தியைத் தீயாய் ஷேர் செய்து வருகின்றனர்.
