தனுசு ராசி அன்பர்களே,

இன்று அபாரமான திறமை வெளிப்படும். நினைத்த வாழ்க்கை கண்டிப்பாக அமையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனமாக இருங்கள். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு இடம் மாற்றத்தால் குடும்பத்தினரை பிரிய வேண்டிய சூழல் உருவாகும். கடல் தாண்டி வரும் செய்திகள் மாற்றத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதி இறக்குமதி துறையில் உள்ளவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பகைப் பாராட்டியவர்கள் நட்பு பாராட்டுவார்கள். பெண்களுக்கு சுய கௌரவ மேலோங்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். கணவனிடம் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் காணப்படுவீர்கள். கல்விக்காக தயாராக இருப்பீர்கள். உயர் கல்வி சிறப்பாக அமையும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்