தனுசு ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களுக்கு பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அதிகாலையிலே அனுகூலமான செய்திகள் கிடைக்கப்பெறும். சிக்கல்கள் விலகி சிகரத்தை தொடுவீர்கள். பொருளாதார நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தி ஆகும். இந்த நாள் மனமகிழ்ச்சி ஏற்படும் நாளாக தான் இருக்கும்.

பெரிய பிரச்சனைகளை எதுவும் இல்லை. சாதிக்கும் வல்லமை இருக்கிறது. சிறப்பான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். நண்பர்கள் நம்பிக்கையுடன் நடந்து கொள்வார்கள். இந்த நாள் திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும். விளையாட்டாக பேசுவதாக நினைத்து எதை எதையோ பேச வேண்டாம். இன்று பெண்கள் கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள்.

தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெறுவீர்கள். முயற்சி செய்தால் நல்லது நடக்கும். இன்று மாணவர்கள் எதார்த்தமாக நடந்து கொள்வீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உயர்கல்வி சிறப்பாக அமையும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: ஐந்து, ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்