மகரம் ராசி அன்பர்களே,

இன்று சிக்கல்கள் விலகி சிறப்பு ஏற்படும் அதிகாலையிலேயே நல்ல செய்தி வரும். சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கப்பட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். சுயதொழில் கைகொடுக்கும். எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடக்கும். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும்.

இறைவழிபாட்டில் ஆர்வமதிகரிக்கும். ஆசைகள் தேவைகள் பூர்த்தியாகும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அவமரியாதையாக பேசியவர்கள் நட்பு பாராட்டுவார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்கும் போது யோசித்து கொடுக்க வேண்டும். முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற கவலைகள் குறைந்துவிடும். உற்றார் உறவினர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

இன்று பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். திருமண வரன்கள் வீடு தேடி வரும். இன்று மாணவர்கள் திறமையால் வெற்றி பெறுவீர்கள். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். யோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். நிதானமாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்