மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் கனவுகள் நினைவாகும் நாளாக இருக்கும். முன்னேற்றம் கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். தெய்வீக நம்பிக்கை ஏற்படும். கோவில் குளங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் சேர்ந்து குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது. உல்லாச பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியைக் கொடுக்கும்.

கருத்தரிப்பு அல்லது பிள்ளை பேரு போன்றவை ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தன பாக்கியம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். முயற்சி திருவினையாக்கும். பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். மாற்றங்கள் ஏற்றங்கள் ஏற்படும்.

இறைவன் அருள் அற்புதமாக இருக்கும். இன்று மாணவர்கள் கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பாடங்களில் முழு கவனம் எடுத்துக்கொண்டு படிப்பது நல்லது. இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 1, 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்