தனுசு ராசி அன்பர்களே,

நேற்றைய பிரச்சினைக்கு இன்று முடிவு கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை இருக்கும். வெளிவட்டாரங்களின் தொடர்புகள் விரிவடையும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து இணைவார்கள். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பண வரவு சீராக இருக்கும். மனக்குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். திறமையாக செயல்பட்டு காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

சின்ன விஷயத்திற்கும் கோபம் வரலாம். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. வேற்று மொழி பேசும் நபரால் நல்லது நடக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். பெண்களுக்கு இன்று வெற்றி மீது வெற்றி வரும். ஆசைப்பட்ட பொருளை வாங்கிக் கொள்வீர்கள். குடும்பத்தினருடன் சேர்ந்து சுற்றுலாக்கள் சென்று வருவீர்கள். இந்த நாள் மனமகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக பணிகளில் ஈடுபடுவீர்கள். திறமையால் வெற்றி பெறுவீர்கள். பெற்றோர் சொல் கேட்டு நடக்க பாருங்கள். இந்த இனிய காணும் பொங்கல் தினத்தில் செல்வம் பெருகட்டும் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்