விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று செல்வாக்கு மிக்க நபராக காணப்படுவீர்கள். கையில் ஓரளவு பண வரவு இருக்கும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். தனவரவு திருப்தியைக் கொடுக்கும். திடீர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து கொள்வது நல்லது. பிள்ளைகள் வழியில் சுப காரியங்கள் முடிவாகும். போட்டிகள் மறைந்துவிடும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும் இன்னல்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். எடுக்கும் முடிவுகள் தெளிவாக இருக்கும். முன்னேற்றமான வாழ்க்கை அமையும்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் காணப்படுவீர்கள். எடுக்கும் முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். குழப்பங்கள் இல்லாமல் இருப்பீர்கள். பெற்றோர் சொல் கேட்டு நடப்பீர்கள். இந்த நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த இனிய காணும் பொங்கல் தினத்தில் செல்வம் பெருகட்டும். மகிழ்ச்சி அதிகரிக்கட்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஐந்து ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்