துலாம் ராசி அன்பர்களே,

இன்று பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்ளும் நாளாக இருக்கும். அனைவரும் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகிச் செல்லும். புதிய சொத்துக்களால் நல்லது நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். சக பணியாளர்களால் நல்லது நடக்கும். பாராட்டுக்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இன்று நல்லதே நடக்கும். யோகமான நல்ல பலம் ஏற்படும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தாருடன் சேர்ந்து கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று மாணவர்கள் எதையும் யோசித்து செயல்படுவது நல்லது. உற்சாக மிகுதியாக காணப்படுவீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். இந்த இனிய காணும் பொங்கல் தினத்தில் செல்வம் பெருகட்டும் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு, நான்கு, ஆறு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்