இணையத்தை கலக்கி வரும் ஒரு வீடியோவில், வயதான பெண் ஒருவர் காட்டின் ராஜாவாகக் கருதப்படும் சிங்கத்தையே குச்சியால் விரட்டும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வீடியோவில், ஒரு லாரியின் அருகே சிலர் பயத்தில் நிற்பதும், சாலையின் மறுபுறம் புதர்களுக்குள் சிங்கம் ஒளிந்திருப்பதும் தெளிவாக காணப்படுகிறது. அச்சம்  மிகுந்த  நேரத்தில், திடீரென ஒரு மூதாட்டி கையில் குச்சியுடன் கத்தி, சிங்கத்தை நோக்கி தைரியமாக ஓடுகிறார்.

மூதாட்டியின் இந்த தாக்குதலைக் கண்டு சிங்கமே பயந்து, புதர்களுக்குள் ஓடிவிடும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலையில் கூடியிருந்த பொதுமக்கள் இந்தக் காட்சியைக் கண்டும், சிங்கம் ஓடியதைக் கண்டும் ஆரவாரத்தோடு  சிரித்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ajin Joseph (@multiversematrix)

“>

இந்த வீடியோவை, @multiversematrix எனும் இன்ஸ்டாகிராம் கணக்கு வெளியிட்டதையடுத்து, அது மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள், மூதாட்டியின் தைரியத்திற்கு பாராட்டுக்களையும், மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

“ஆஹா, ஆச்சி ஆச்சி ”,  போன்ற கருத்துகள் வீடியோவின் கீழ்  பதிவாகியுள்ளன. இந்த வீடியோ, மனித உற்சாகமும், தைரியமும் எப்படி எல்லைகளைத் தாண்டி செயல்படுகின்றன என்பதை வலியுறுத்தும் வகையில் காணப்படுகிறது. சமூக ஊடகங்களில் இந்நிலையில், இந்த மூதாட்டி ஒரு உண்மையான ‘மாநிட சிங்கம்’ என புகழப்பட்டு வருகிறார்.

குறிப்பு:- ஆனால் இது எங்கு நடந்தது உண்மையா? அல்லது AI  உருவாக்கமா என்பது குறித்து தகவல் தெரியவில்லை.  இணையத்தில் வைரலாகிறது..