இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் பணி நீக்கம் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதே சமயம் சராசரி நிறுவன சம்பள உயர்வு இந்தியாவில் இந்த வருடம் 8 முதல் 11 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரான்ஸ்டார்ட் இந்தியாவின் கூற்றுப்படி, 0-5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்ட ஜூனியர் தொழில் வல்லுனர்கள் ஜூனியர்களை விட அதிக சம்பளம் வாங்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு 10 முதல் 11 சதவீதம் வரை அதிகபட்ச அதிகரிப்பு வழங்கப்படும்.

இந்தியாவில் உள்ள அடுக்கு ஒன்னு மற்றும் அடுக்கு 2 நகரங்களில் புதியவர்கள் மற்றும் ஜூனியர் தொழிலாளர்களின் சேவை அதிகமாக உள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ள மூத்த தொழில் வல்லுநர்களுக்கு அனைத்து மட்டத்திலும் சராசரி சம்பள உயர்வு 8-9 சதவீத வரம்பில் குறைவாக இருக்கும். அதனைப் போலவே நடுத்தர அளவிலான தொழில் வல்லுனர்களுக்கு சராசரியாக 9 முதல் 10 சதவீதம் அதிகரிப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.