12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் 7ஆம் தேதி நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் மனநலனை பாதிக்கக் கூடாது என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மே 8ஆம் தேதி +2 ரிசல்ட்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கைக்கு மே 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.