மதுரையில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் கணவர் பிரிந்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்த பெண் செல்வகுமார் (32) என்பவரை 2-ம் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2 பிள்ளைகளும் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் கொரோனாவுக்கு பிறகு வீட்டிலேயே இருந்தனர். அப்போது அவரின் 8 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தாய்க்கு தெரிய வரவே செல்வகுமார் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் செல்வகுமார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் செல்வகுமார் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நீதிபதி 30 வருடங்கள் சிறை தரனை விதைத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.