இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்கள் சுயநலத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், மனிதாபிமானத்திற்குச் சான்றாக ஒரு குப்பை பொறுக்கும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தினமும் 50 முதல் 100 ரூபாய் வரை மட்டுமே சம்பாதிக்கும் இந்த நபர், தனக்காக வெறும் 10 ரூபாய்க்கு அரிசி வாங்கி உப்புடன் உண்டு பசியாறுகிறார். ஆனால், மீதமுள்ள பணத்தைக் கொண்டு சுமார் 15 ஆதரவற்ற நாய்களுக்கு உணவளித்து அவற்றைப் பராமரித்து வருகிறார்.
“உதவி செய்யப் பணம் தேவையில்லை, பெரிய மனது இருந்தால் போதும்” என்பதை இந்த மனிதர் தனது செயலில் நிரூபித்துள்ளார். இந்த வைரல் வீடியோவில், தன்னிடம் உதவி கேட்க வந்தவரிடம் தனக்காக எதையும் கேட்காமல், அந்த நாய்களுக்காகவே உதவி கோருகிறார். இதைக் கண்ட இணையவாசிகள் “இவர்தான் உண்மையான ஹீரோ” என்றும் “மனிதாபிமானம் இன்னும் உயிரோடு இருக்கிறது” என்றும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
<a href=”http://
This video Made me Happy and Sad at the Same time🥹🧡….
If you still have excuses, just watch this once🙌🏼 pic.twitter.com/INaR5xpcrq— Ravi Tiwari🇮🇳 (@Ravitiwariii_) January 15, 2026
“>
வாயில்லா ஜீவன்களின் பசியைத் தீர்ப்பதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டிருக்கும் இந்த மனிதரின் கதை, நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொண்டால் இந்த உலகம் இன்னும் அழகாகும் என்ற நம்பிக்கையைத் தருகிறது
