ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள ஹரிஓம் நகர் குடிசைப் பகுதியில் ஒரு குடும்பத்தை பெரும் துயரம் தாக்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை, 50 வயதான தொழிலாளி பூரி லால் பைரவா, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அடுத்த பேரிடியாக அவரது இறுதிச் சடங்கு முடிந்த இரண்டு மணி நேரத்தில், அவரது 25 வயது மகன் ராஜு பைரவாவும் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த இரு மரணங்களும் அந்த ஏழைக் குடும்பத்தை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியது. இறுதிச் சடங்கிற்கு பணமில்லாத நிலையில், அக்கம்பக்கத்தினர் பணம் திரட்டி இருவரின் இறுதிச் சடங்கையும் செய்தனர்.

இந்த துயரமான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. பூரி லாலின் மனைவி குட்டி மற்றும் அவர்களது 13 வயது மகன் அரவிந்த் மட்டுமே இப்போது குடும்பத்தில் உள்ளனர். ஒரே நாளில் கணவனையும் மகனையும் இழந்த குட்டி கதறி அழுது கொண்டிருக்கிறார். அரவிந்துக்கு இந்த பேரிடியை எப்படி எதிர்கொள்வது என்று புரியவில்லை. இது அப்பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது