பெற்ற மகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே, ஒரு கொடூர அரக்கனாக மாறி தன் சொந்த 6 வயது மகளைச் சாக்கடை வடகால் (Drain) ஒன்றில் அமிழ்த்தி படுபயங்கரமாகக் கொலை செய்ய முயன்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் அரங்கேறியுள்ளது.
அந்தப் பிஞ்சு ஆவி அழுது துடித்தும், கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் அந்தச் சிறுமியைத் தாக்கி, உயிருக்குப் போராடும் நிலையில் வீசியெறிந்துள்ளான் அந்தப் பாவி!
இந்த விபரீதச் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்தவர்கள் குழந்தையை மீட்டுள்ள நிலையில், இந்தச் ‘சைக்கோ’ தந்தை ஏற்கனவே தனது சொந்தத் தாயையும் கொலை செய்ய முயன்றவன் என்கிற திடுக்கிடும் உண்மையும் வெளிவந்துள்ளது.
மனிதத்தன்மையின்மையின் உச்சக்கட்டமாக நடந்துள்ள இந்த வன்முறைச் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கியெடுத்துள்ளது.
#UttarPradesh #Sultanpur Horror: A heartless father tried to drown his young daughter in a drain. The girl cried desperately, but the monster didn’t stop. He had previously tried to kill his own mother & is being called a psycho.
1/2 pic.twitter.com/yMQF6OpmXL— Siraj Noorani (@khojepatrakaar) June 1, 2026
“>
தற்போது இந்த அரக்கன் மீது போலீசார் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வலைவீசித் தேடி வரும் நிலையில், பிஞ்சுகளின் பாதுகாப்பிற்கு வீடுகளுக்குள்ளேயே இருக்கும் இத்தகைய ஆபத்துகள் குறித்து நாடு முழுவதும் விவாதங்களும், பெரும் பரபரப்பும் கிளம்பியுள்ளது!
