விமான நிலையத்தில் தனது உடைமை நீண்ட நேரமாக வராததால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், உடைமைகளை ஏற்றி இறக்கும் பெல்ட் பகுதியிலேயே ஏறி நின்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பயணி தனது உடைமை வருவதில் ஏற்பட்ட தாமதத்தால் கடும் கோபமடைந்து, அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் விமான நிலையத்தின் கட்டுப்பாடுகளை மீறி அவர் பெல்ட் பகுதியில் ஏறி நின்றது அங்கிருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்த பல இணையவாசிகள், விமான நிலையங்களில் பயணிகளின் உடைமைகளைத் திரும்பப் பெறுவதில் நிலவும் தாமதம் மற்றும் அலட்சியம் குறித்துத் தங்களது ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

“>

இந்நிலையில் பலரும் இந்தப் பயணியின் செயலைத் தவறாகக் குறிப்பிட்டாலும், விமான நிலைய நிர்வாகத்தின் மெத்தனமான போக்கே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட காலத்திலும், அடிப்படைச் சேவைகளில் இன்னும் முன்னேற்றம் தேவை என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.