கேரள மாநிலத்தில் உள்ள நேமம் பகுதியில் சுமேஷ்-ஆர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு துருவன்(5) என்ற மகனும், துருவிகா(2) என்ற மகளும் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த துருவன் தனது தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது துருவிகாவின் கையில் இருந்த பொம்மை வீட்டிற்கு பின்னால் இருக்கும் கிணற்றில் விழுந்தது. இதனால் துருவன் ஒரு நாற்காலியை எடுத்து வந்து அதன் மீது ஏறி தற்செயலாக கிணற்றுள் எட்டிப் பார்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துருவன் கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.

இது தெரியாமல் ஆர்யா வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து தனது பிள்ளைகளை தேடி பார்த்த போது கிணற்றுக்கு அருகே நாற்காலி இருந்ததை கண்டார். அருகே சென்று பார்த்தபோது கிணற்றில் துருவன் மிதந்தை கண்டு கதறி அழுதார். உடனே ஆர்யா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது மகனை மீட்டு அருகே இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு துருவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.