தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று 47,320 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரண தங்கம் இன்று 46 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை 45 ரூபாய் குறைந்து 5, 820 ரூபாயாக உள்ளது. இந்த விலை குறைப்பு தங்க பிரியர்கள் மத்தியில் நகை வாங்க புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் குறைந்து 78 ரூபாயாக உள்ளது.