சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் நேற்று மாற்றமின்றி தொடர்ந்தது. இதே போன்று இன்றும் ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி  கடந்த சனிக்கிழமை விலையே நீடிக்கிறது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7370 ரூபாய்க்கும், ஒரு சவரன் 58 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் 7,875 ரூபாயாகவும், ஒரு சவரன் 63 ஆயிரம் ரூபாய் ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலைகளும் மாற்றமின்றி ஒரு கிராம் 106 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் ஆகவும் இருக்கிறது.