அதிமுக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் எனவும் வாரிசு அரசியல் செய்யும் திமுக ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதிமுக கட்சியை மற்றும் விமர்சிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, எல்லாருமே துடிக்கிறாங்க. உங்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு.

தமிழகத்தில் 30 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்து அதிமுக மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளது. எனவே தான் விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை. அதை நினைத்து மற்றவர்கள் ஆதங்கப்படுவது ஏன்.? ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு குறிக்கோள் இருக்கும். அதை மையப்படுத்தி தான் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். கடந்த காலங்களில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோன்றுதான் தற்போதும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்களை கட்சியிலிருந்து நீக்கி உள்ளனர். மேலும் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.