வயநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அண்ணன் – தங்கை இடையிலான செல்லச் சண்டைகள் குறித்து மிக ஜாலியாகப் பகிர்ந்து கொண்டார். நேற்று முதல் தனது தங்கை பிரியங்கா தன்னிடம் கோபித்துக் கொண்டு பேசவில்லை என்றும், இன்று காலை வயநாடு வருவதற்காக விமானத்தில் ஏறியபோது தான் ‘ஹலோ’ சொன்னதைக் கூட அவர் கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டதாக ராகுல் கலகலப்பாகத் தெரிவித்தார்.
”எனக்கும் தங்கச்சிக்கும் சண்டை பிரியங்கா என் கூட பேசல" | Rahul Gandhi Priyanka | Wayanad | Congress#rahulgandhi #priyankagandhi #congress #wayanad #wayanadelection #wayanadlandslide #abpnadu pic.twitter.com/tZKoIES78F
— ABP Nadu (@abpnadu) February 26, 2026
இருப்பினும், விமானம் வயநாட்டில் தரை இறங்கியதுமே பிரியங்காவின் கோபம் மறைந்து, அவர் எப்போதும் போல தன்னிடம் சகஜமாகப் பேசத் தொடங்கியதாக ராகுல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பிணக்குகளைப் போக்கி அன்பை வளர்க்கும் இந்த மாற்றத்தைத்தான் “வயநாடு மேஜிக்” என்று தான் அழைப்பதாக ராகுல் காந்தி பேசியது அங்கிருந்த தொண்டர்களிடையே பலத்த கைதட்டலை வாங்கியது.
