இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பொது இடத்தில் தன்னிடம் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரிடம் நடந்து கொண்ட விதம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக உலக நாட்டுத் தலைவர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும்போது, யாராவது அத்துமீறி அருகில் வந்தால் பாதுகாவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்துவது வழக்கம்.

ஆனால், மெலோனி மிகவும் நிதானமாக, அந்த இளைஞரின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நெட்டிசன்கள், “ஒருவேளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தச் சூழலில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?” என ஒப்பிட்டு விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

ட்ரம்ப் போன்ற ஆளுமைகள் பொதுவாக இதுபோன்ற நேரங்களில் அதிரடியாகவோ அல்லது கோபமாகவோ எதிர்வினையாற்ற வாய்ப்புள்ள நிலையில், மெலோனியின் இந்த கனிவான அணுகுமுறை அனைவரது இதயங்களையும் வென்றுள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் என்பதைத் தாண்டி, மக்களிடம் அவர் காட்டும் இந்த எளிமைதான் தற்போது அவரை உலகளவில் ‘ஹாட் டாபிக்’ ஆக்கியுள்ளது.