சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. ஒரு டோல் பிளாசாவிற்கு காரில் வந்த நபர், டோல் வரி கட்டும் போது அங்குள்ள ஊழியரிடம் செய்த கலாட்டா தான் இப்போது செம வைரல். “தம்பி, நான் இப்ப வழக்கம்போல டோல் கட்டுனா என் பொண்டாட்டிக்கு மெசேஜ் போயிரும். வீட்ல சொல்லாம வெளிய வந்துருக்கேன், மெசேஜ் போனா அவ்வளவுதான், நான் மாட்டிக்கிவேன்” என அந்த நபர் செம ‘கிரியேட்டிவ்’ ஆக ஒரு காரணத்தைச் சொல்ல, டோல் ஊழியரே ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டார். அந்த நபரின் அப்பாவித்தனமான பயமும், அவர் பேசிய விதமும் அங்கிருந்தோரை கலகலப்பாக்கியது.

View this post on Instagram

A post shared by @instaviral.inm

​இந்த சுவாரஸ்யமான உரையாடலைக் கேட்ட டோல் ஊழியர், கோபப்படாமல் சிரித்துக்கொண்டே அந்த நபருக்கு ஒரு செம ஐடியாவைக் கொடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது. “நிஜமாவே இது எல்லா கணவன்மார்களுக்கும் இருக்குற பயம் தான்” என ஒரு தரப்பினரும், “அந்த மனுஷனோட ஐடியா வேற லெவல்” என மற்றொரு தரப்பினரும் கமெண்ட்டுகளைத் தட்டி வருகின்றனர். எது எப்படியோ, ஒரு சாதாரண டோல் கேட் பயணம் இப்போது ஒட்டுமொத்த இணையத்தையும் சிரிக்க வைக்கும் ஒரு வைரல் மொமெண்ட்டாக மாறியுள்ளது.