குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் டோசா சாப்பிட்ட இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்போது ஒரு பயங்கரமான கொலை வழக்காக உருவெடுத்துள்ளது.
முதலில் கடையில் வாங்கிய தோசா மாவுதான் காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் பெற்றோரே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்திருக்கலாம் என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த மகா மற்றும் மிஸ்ரீ ஆகிய குழந்தைகளின் தந்தை விமல், எலி மருந்து உள்ளிட்ட 10 விஷ பாக்கெட்டுகளை வாங்கியதும், அதில் 2 பாக்கெட்டுகள் மாயமானதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதைவிட அதிர்ச்சியாக, குழந்தைகளின் தாய் பாவனா எழுதிய டைரி போலீசாரிடம் சிக்கியுள்ளது. அதில் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற தீராத ஆசை இருந்ததும், அதற்காக அவர் பல கோயில்களில் வேண்டிக்கொண்டதும் தெரியவந்துள்ளது.
3 மாத கைக்குழந்தைக்கு யாராவது தோசா ஊட்டுவார்களா? என்ற போலீசாரின் சந்தேகமே இந்த வழக்கை திசை திருப்பியுள்ளது. தற்போது புதைக்கப்பட்ட 3 மாத குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வாரிசு அரசியலைப் போல ‘ஆண் வாரிசு’ மோகத்தால் பெற்ற பிள்ளைகளையே இந்தத் தம்பதி பலி கொடுத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
