உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், தனது சொந்த மருமகனுடன் (சகோதரியின் மகன்) கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் ஒருவர், அதற்கு இடையூறாக இருந்த மாமியாரைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான அந்தப் பெண், தனது மருமகனைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் தவறான உறவு மாமியாருக்குத் தெரியவந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர்.

​கொலை செய்வதற்கு பத்து நாட்களுக்கு முன்பே, மாமியாருக்கு டீ-யில் விஷம் கொடுத்துக் கொல்ல அந்தப் பெண் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த முயற்சியில் மாமியார் உயிர் பிழைத்த நிலையில், தற்போது இருவரும் சேர்ந்து அவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள அவரது காதலனான மருமகனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.