திருட முயன்ற ஒருவரை, கடையில் இருந்த பெண் ஒருவர் நேரடியாக எதிர்கொண்டு பிடித்து சிக்கவைத்து, அசைக்க முடியாத வகையில் பிடித்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, ஒரு கடையின் சிசிடிவி மூலம் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அந்த வீடியோவில், ஒரு இளம் பெண் தனது பொருட்களுடன் கடையில் அமைதியாக அமர்ந்திருக்கும் நிலையில், ஒரு ஆண் திருடும் நோக்கத்துடன் மெதுவாக கடையில் நுழைகிறார்.
பெண்ணின் கவனம் வேறு திசையில் இருக்கும்போது, அந்த ஆண் மெதுவாக சில பொருட்களை எடுத்து வெளியேற திட்டமிடுகிறார். ஆனால், அவரது முயற்சி தோல்வியடைகிறது. அவர் கையை நீட்டிய உடனேயே அந்தப் பெண் புரிந்து கொண்டு, வேகமாக எழுந்து அவரை நோக்கி ஓடுகிறார்.
திருடன் தப்பி ஓட முயன்றாலும், அந்தப் பெண் அவரை பிடித்து தரையில் வீசுகிறார். பிறகு, அவரது கால்களால் இறுக்கமாக பிடித்து, எப்படியும் தப்பிக்க முடியாத வகையில் கட்டுப்படுத்துகிறார். இதற்கிடையில், கடைக்கு வெளியே இருந்த ஒருவர் உள்ளே வந்து, அந்தப் பெண்ணுக்கு உதவுகிறார். இருவரும் சேர்ந்து அந்த ஆணை கட்டுப்படுத்துகிறார்கள்.
एक चोर ने पूरे कर समाज की नाक कटवा दी
देखें वीडियो
😹😹😹😹😹😹😹 pic.twitter.com/KY1AKZByU7— Eshika (@syadvada169665) September 10, 2025
மேலும் இந்த வீடியோவை @syadvada169665 என்ற பயனர், சமூக வலைத்தளமான ‘X’ இல் பகிர்ந்துள்ளார். இதனை ஆயிரக்கணக்கானோர் பார்த்து, பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
