அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களின் நெருங்கிய தோழரும், வலதுசாரி இளைஞர் செயற்பாட்டாளரும், பிரபல இன்ஃப்ளூயன்சருமான சார்லி கெர்க், யூட்டா வாலி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 10 ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும், சந்தேக நபரின் புகைப்படங்களும் எஃப்பிஐ (FBI) வெளியிட்டுள்ளது.

எஃப்பிஐ வெளியிட்ட தகவலின் படி, சுட்டுக் கொன்ற பின் சந்தேக நபர் பல்கலைக்கழகக் கட்டிடத்தின் கூரையிலிருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளார். சம்பவத்துக்குப் பிந்தைய காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதால், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

“>

 

குற்றவாளியை பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், உடனடி தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்படும் எனவும் எஃப்பிஐ அறிவித்துள்ளது.