ஜம்முவின் கெனால் சாலை பகுதியில், திங்கள்கிழமை ஒரு பெண் தனது கையிலுள்ள அரிவாளால் ஒரு கார் ஓட்டுநரை தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிய சாலை மோதலிலிருந்து இந்த விவாதம் உருவாகியதாக கூறப்படுகிறது. வீடியோவில் அந்தப் பெண், கார் ஓட்டுநரின் காலரைப் பிடித்து இழுத்து அவரை தாக்க முற்படுவதும், அருகில் ஒரு போக்குவரத்து போலீசார் இருந்தும் யாரும் தடுக்க முயற்சிக்காததும் தெளிவாகக் காணப்படுகிறது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி, பல பயனர்களிடம் அதிர்ச்சியையும், நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் “இவரை நேரே ராணுவத்தில் சேர்த்துவிடுங்கள்” என கிண்டலாகக் கூறியிருந்தால், மற்றவர்கள் “சாதாரண சாலை மோதலுக்கு இவ்வளவு கோபமா?” என விமர்சித்துள்ளனர். மேலும் அமர் உஜாலா செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இரு தரப்பினரும் சமாதானமாக விவகாரத்தை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
जम्मू शहर: सड़क विवाद में महिला ने निकाल लिया गंडासा
◆ कैनाल रोड क्षेत्र की बताई जा रही है घटना
◆ महिला ने कार चालक पर गाड़ी को टक्कर मारने का आरोप लगाया#JammuKashmir | Jammu Kashmir | #RoadRage pic.twitter.com/A3dCy3a5v8
— News24 (@news24tvchannel) July 22, 2025
