இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு புனிதமான இடம் இருக்கிறது. அதில், பக்தர்களால் தீவிரமாக போற்றப்படும் தெய்வம் தான் காளி அம்மன். ஆனால் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் தனது காலில் (கால் சதைப் பகுதியில்) காளி அம்மனின் உருவத்தை டாட்டூவாக பதிக்கச் செய்வது காணப்படுகிறது. டாட்டூ ஸ்டூடியோவில் படுத்த நிலையில் உள்ள அந்த பெண்ணை, ஒரு கலைஞர் மிக கவனமாக காளி அம்மனின் படத்தை பதிக்கிறார். வீடியோவில், இது ஒரு பெண்ணுக்குள் இருக்கும் ‘உள் பலத்தின்’ அடையாளமாக விவரிக்கப்படுகிறது.

ஆனால், பலரும் இந்த செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர். “அந்த டாட்டூ வேற ஒரு இடத்தில் போட்டிருக்கலாம். இதனால் மத உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன,” என சமூக வலைதளங்களில் மக்கள் வேதனையுடன் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோவை “Hindutva Vigilant” என்ற கணக்கு பகிர்ந்தது. குறுகிய நேரத்திலேயே இது லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. இதன் கீழ் பல கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.

“>

ஒருவர், “ஏதேனும் மதத்தை இழிவுபடுத்துவது நீதியல்ல,” எனக் கண்டித்துள்ளார்.
மற்றொருவர், “இது என்ன கோமாளித்தனம்? இதுக்கு எதிராக எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.  மூன்றாவது ஒருவர், “மூடநம்பிக்கையை தூண்டி, மதத்தை இழிவுபடுத்தும் இவர்கள் வெட்கமே இல்லாதவர்கள்” என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது “மதத்திற்கு மரியாதை” மற்றும் “தனிப்பட்ட சுதந்திரம்” என்ற இரண்டும் உரையாடப்படும் முக்கிய விவகாரமாக மாறியுள்ளது.