பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மா, குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லை ஆட்டமிழக்கச் செய்து அவரை கிண்டல் செய்த விதம் வைரலாகி வருகிறது.
சிக்ஸர் அடிக்க முயன்ற கில் கேட்ச் கொடுத்து அவுட்டானதும், சுயாஷ் சர்மா தனது தொப்பியைக் கழற்றி மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி குனிந்து மரியாதை செய்வது போல கொண்டாடினார்.
இது கடந்த ஆண்டு ஆர்சிபி-க்கு எதிராக சதம் அடித்தபோது சுப்மன் கில் செய்த அதே கொண்டாட்ட முறையை அப்படியே நகலெடுத்து அவருக்குப் பதிலடி கொடுப்பது போல இருந்தது.
முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி அபாரமாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 128 ரன்கள் சேர்த்தது. இதில் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 58 பந்துகளில் தனது மூன்றாவது ஐபிஎல் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
Suyash sharma knows how to give it back 🥶 pic.twitter.com/sgnhnHFgcE
— Kevin (@imkevin149) April 24, 2026
“>
கில் 32 ரன்களில் ஆட்டமிழந்தாலும், சாய் சுதர்சனின் சிறப்பான ஆட்டத்தால் குஜராத் அணி 205 ரன்களைக் குவித்தது. இருப்பினும், சுயாஷ் சர்மா கில்லை வீழ்த்திய பிறகு செய்த அந்த நையாண்டி கொண்டாட்டம் தான் சமூக வலைதளங்களில் இப்போது ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது.
