தமிழ் சினிமாவில் வெளியான இறுதி சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களை தயாரித்தவர் சசி காந்த். இவர் தற்போது டெஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர்  முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இது டெஸ்ட் கிரிக்கெட் தொடரை மையப்படுத்தி உருவாகும் படம்.

இந்த படத்தில் மாதவன் பயிற்சியாளராகவும் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் நெட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் தற்போது டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து மிகவும் வைரலாகி வருகிறது.