டெல்லியில் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷெல்லி ஓப்ராய் மொத்தமுள்ள 260 வாக்குகளில் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ரேகா குப்தாவுக்கு 116 வாக்குகள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு இருந்ததால் பாஜகவினர் தேர்தலை நடத்த விடாமல் அமளி செய்தனர்.

அப்போது அங்கிருந்த தண்ணீர் பாட்டில்களை வீசியும் காகிதங்களை எறிந்தும் அமளி செய்தனர். இதில் மேயர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட தாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக பெண் கவுன்சிலர்கள் மற்றும் ஆம் ஆத்மி பெண் கவுன்சிலர்கள் தலைமுடியைப் பிடித்து இழுத்தும் ஒருவருக்கொருவர் கீழே தள்ளிவிட்டு சண்டை போட்டுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதன் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டதோடு இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.